என் மலர்
உள்ளூர் செய்திகள்
வட மாநில காதல் ஜோடி தற்கொலை செய்தது ஏன்?போலீஸ் விசாரணை
- குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகிறது.
- ஓடிசா மாநிலத்தை சேர்ந்த திம்பு மாஜி (22), பீகார் மாநிலத்தை சேர்ந்த கோமல் குமாரி (18) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள ஒரு நிறுவனத்தில் வடமாநிலங்களை சேர்ந்த 15 குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.
காதல் ஜோடி
இதில் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த திம்பு மாஜி (22), பீகார் மாநிலத்தை சேர்ந்த கோமல் குமாரி (18) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை இவர்கள் இருவரும் தங்கியிருந்த அறையில் இருந்து காணாமல் போயினர். இதுகுறித்து நிறுவன மேலாளர் விஜிநாதனிடம் கூறிவிட்டு வடமாநில தொழிலாளர்கள் சிலர் தேட சென்றனர். ஈரோடு ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருவரையும் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
தூக்கு போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று பகல் அதே மில்லில் பணியாற்றும் ஆதித்யதாஸ் என்பவர் அருகில் உள்ள காலி இடத்தில் சென்றபோது அங்கிருந்த வேப்ப மரத்தில் காதலர்கள் இருவரும் ஒரே துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த ஆதித்யதாஸ் அதே மில்லில் பணியாற்றும் இறந்த பெண்ணின் மூத்த சகோதரி சாலோ குமாரியிடம் சென்று கூறினார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
விசாரணை
இதனிடையே சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு நிறுவன மேலாளர் தகவல் அளித் தார். அதன்பேரில் போலீ சார் விரைந்து வந்து இரு வரது உடல்களையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காதலர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.