என் மலர்
உள்ளூர் செய்திகள்
புதிய கட்டிடம் கட்டித் தர கோரிக்கை
- பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
- இக் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் பிற பகுதிகள் மிகவும் பழுதடைந்து, மழை காலங்களில் மழைநீர் ஊராட்சி மன்ற அலுவலகத் திற்குள் புகுந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
தற்போது வரை அதே கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இக் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் பிற பகுதிகள் மிகவும் பழுதடைந்து, மழை காலங்களில் மழைநீர் ஊராட்சி மன்ற அலுவலகத் திற்குள் புகுந்தது.
இதனால் அலுவலகத்திற்கு உள்ளே இருந்த கம்ப்யூட்டர் சாதனங்கள் பழுதடைந்தது. பல்வேறு ஆவணங்களும் மழையில் நனைந்து சேதம் அடைந்தது. இதனால் அலுவலகப் பணியாளர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே பழுதடைந்த மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.