என் மலர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- வெயிலின் தாக்கத்தால் வாடிய பயிர்களும் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, இருக்கூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. அப்போது, திடீரென இடித்த இடியின் காரணமாக பல வீடுகளில் மின்விசிறி, டிவி, பிரிட்ஜ், பல்பு உள்ளிட்டவை பழுதடைந்தன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் இரு சக்கர வாகனத்தில் சென்ற வர்கள், நடந்து சென்ற பொதுமக்கள், நனைந்து கொண்டே சென்றனர்.
அதேபோல் சாலையோர ங்களில் போடப்பட்டு இருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து வாட்டி வந்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் பூமியின் சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசணம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கத்தால் வாடிய பயிர்களும் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.