என் மலர்
உள்ளூர் செய்திகள்
பஸ்சில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
- சுமித் குமார் பஸ்சில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- வட மாநில தொழிலாளி பஸ்சில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்து பலியானார்.
பரமத்திவேலூர்
ஜார்க்கண்ட் மாநிலம் சார்ட்பார்வா பாலமு, மணிகா ரப்டா பகுதியைச் சேர்ந்தவர் சுமித் குமார். இவர் மதுரை பகுதியில் உள்ள ஒரு பில்டிங் காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தார்.
அந்த காண்டாக்ட் நிறுவனத்திற்கு மேலும் ஆட்கள் தேவைப்படுவதாக அந்த நிறுவனத்தினர் கூறியதை அடுத்து சுமித்குமார் ஜார்கண்ட் மாநிலம் சென்று 18 பேர்களை வேலைக்கு அழைத்துக் கொண்டு நேற்றுமுன்தினம் சேலத்தில் இருந்து மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நன்செய் இடையாறு செல்லும் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பஸ்சில் பயணம் செய்த வட மாநில தொழிலாளி அரசு பஸ்சில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பஸ்சில் இருந்து உடன் வந்தவர்கள் ஒருவர் கீழே விழுந்து விட்டார் பஸ்சை நிறுத்துங்கள் என அவருடன் வந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓட்டுநர் பஸ் நிறுத்தி பஸ்சில் வந்த 18 பேர்களையும் கீழே இறக்கி விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சென்று விட்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் பஸ்சில் இருந்து கீழே விழுந்து பலியான வட மாநிலத் தொழிலாளர் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பஸ்சில் இருந்து பலியான வடமொநிவ தொழிலாளர் யார் என்பது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம், சார்பார்வா பாலமு, மணிகா ரப்டா பகுதியை சேர்ந்த சார்க் புய்யான் (52) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு வேலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அரசு பஸ் ஓட்டுனர் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (49) மற்றும் நடத்துனர் மதுரை, கூடல் நகர் பகுதியில் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (42) ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.