என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி-தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா
- ஷாஸ்வத் 42 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
- தங்கப்பதக்க வென்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
ஊட்டி,
ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகர் ஸ்டேடியத்தில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. போட்டியில் நீலகிரி மாவட்டம் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி மாணவன் ஷாஸ்வத் 42 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
தங்கப்பதக்க வென்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை அஸ்மா காணும் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சதீஷ்குமார், ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர்.
பாராட்டு விழாவில் மாணவர் ஷாஸ்வத் மற்றும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் அப்பாஸ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த மாணவன் மாநில அளவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் 2-வது இடமும், மாவட்ட அளவிலான 200 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கமும், நீளம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.