search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அப்டா மார்க்கெட் அருகே  ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்  போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை
    X

    அப்டா மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை

    • சம்பந்தப்பட்ட கடை களுக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டது.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொ ண்டனர்.
    • ஓட்டல்கள் பேக்கரிகள் உள்பட 7 கடைகளை இடித்து அகற்றினார்கள். மேலும் இரண்டு கடைகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கடைகள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்,

    ஜூன். 17-

    கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து அந்த பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு சாலை யில் ரவுண்டானா அமைக்கப்ப டுகிறது.இந்த ரவுண்டானா அப்டா மார்க்கெட்டில் முன்பகுதியில் அமைப்ப தற்கு கடைகள் இடையூறாக இருந்தது. இதையடுத்து அந்த கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சம்பந்தப்பட்ட கடை களுக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டது.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொ ண்டனர். இன்று காலை ஜேசிபி எந்திரம் உதவியு டன் அப்டா மார்க்கெட் முன் பகுதியில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டது.

    ஓட்டல்கள் பேக்கரிகள் உள்பட 7 கடைகளை இடித்து அகற்றினார்கள். மேலும் இரண்டு கடைகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கடைகள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×