search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே  ரூ.24 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்தல்
    X

    ஓசூர் அருகே ரூ.24 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்தல்

    • லாரி பறிமுதல்-டிரைவர் உட்பட 2 பேர் கைது.
    • குட்கா பொருட்கள் 62 சாக்கு பைகளில் மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று மாலை, பூனப்பள்ளி செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.8 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 1,639 கிலோ குட்கா பொருட்கள் 62 சாக்கு பைகளில் மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் விசாரணையில் , அவற்றை பெங்களூரி லிருந்து சேலத்திற்கு விற்பனைக்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார், குட்கா பொருட்களை ரூ.16 லட்சம் வாகனத்துடன் பறிமுதல் செய்து, டிரைவர் மணி மற்றும் உரிமையாளர் மதன்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×