என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகேமொபட் மீது அரசு பஸ் மோதி அண்ணன்-தங்கை படுகாயம் :ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

- அரசு பஸ் டிரைவர் நந்தகோபால கிருஷ்ணன் பஸ்சை ஓட்டி வந்தார்
- அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயம் இன்றி தப்பினர்.
கடலூர்:
நெய்வேலியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மாலை பண்ருட்டி நோக்கி வந்தது. அரசு பஸ் டிரைவர் நந்தகோபால கிருஷ்ணன் பஸ்சை ஓட்டி வந்தார்.அரசு பஸ் மோதியது பண்ருட்டி ஒன்றியம் அன்னக்காரன் குப்பம் அங்காளம்மன் கோவில் அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அரசு மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அன்னக்காரன் குப்பம் வடக்குத் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சம்பத்குமார் (வயது 23), என்பவரும் பின்னால் உட்கார்ந்து வந்த அவரது தங்கை சவுந்தர்யா ஆகிய 2 பேரும் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த விபத்தால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயம் இன்றி தப்பினர்.
விசாரணை இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.