என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
உளுந்தூர்பேட்டை அருகே16 வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் சென்னையில் கைதுபோக்சோவில் சிறையில் அடைப்பு சிறையில் அடைப்பு
By
மாலை மலர்15 March 2023 3:36 PM IST

- பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மாயமானர். மதியழகன் (வயது 23) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தைகூறி கடத்தி சென்று சென்னையில்பதுங்கியிருப்பதுதெரிந்தது,
- தனிப்படை போலீஸார், மதியழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் மாயமானர். இது குறித்து சிறுமியின் தந்தை உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் மதியழகன் (வயது 23) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று சென்னையில் பதுங்கியிருப்பது போலீ சாருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த மதியழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார். மதியழகனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
X