என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் நீட் தேர்வு நடந்தது
- 5 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
- மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை தாமரைப் பன்னாட்டு பள்ளி, தஞ்சை பிளாசம் பப்ளிக் பள்ளி, வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகம், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி, கும்பகோணம் மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டை பிரில்லியண்ட் பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
5440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
முன்னதாக தேர்வு மையத்திற்கு காலையில் வந்த மாணவ- மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.