என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![புதிய பாரத எழுத்தறிவு தேர்வு புதிய பாரத எழுத்தறிவு தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/03/20/1852494-the4871.webp)
புதிய பாரத எழுத்தறிவு தேர்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
- தமிழில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 236 மையங்களில் நடந்த தேர்வினை 2,346 பேர் எழுதினர்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு, அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கான பாட திட்டத்தில், தமிழில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கணித பாடம் மற்றும் உடல்நலம் காப்போம் பகுதியும், அவசரகால தொலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இத்திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நேற்று 236 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டன. இதில் 2,346 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.