என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவர்சோலையில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம்
- அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது.
- பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊட்டி,
தேவா்சோலை பேரூராட்சி 3-வது டிவிசனில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து வாா்டு கவுன்சிலா் ரசீனா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் கீா்த்தனாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட 16-வது வாா்டில் உள்ள 3-வது டிவிஷனில் உள்ள எஸ்டேட் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். அங்கன்வாடிக்கு என தனிக் கட்டிடம் இல்லை. மேலும், எவ்வித பராமரிப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோா் தயங்குகின்றனா்.
இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி இருந்தார்.
தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.