என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/20/1901655-03.webp)
புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ள திருக்கண்ணபுரம் ஆரம்பசுகாதார நிலையம்.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 110 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நாகப்பட்டினம் தொகுதியில் புதிய கட்டடம் வேண்டுமென்று அமைச்சரிடம் மனு அளித்திருந்தேன்.
நாகப்பட்டினம்:
நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நாகப்பட்டினம் தொகுதி திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கணபதிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா என்று கேள்வி எழுப்பியி ருந்தேன். அதற்கு பதிலளித்த, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.
அதன்படி, இரண்டே மாதங்களில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திருக்கண்ணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 120 லட்சமும், திருப்பயத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 120 லட்சமும், கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 110 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் வேண்டுமென்று ஏற்கெனவே அமைச்சரிடம் மனு அளித்திருந்தேன். அதன்படி ஆழியூர் துணை சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 35 லட்சமும், பெரியக ண்ணமங்கலம் துணை சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 35 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.