என் மலர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாநகரில் புதிய சிமெண்ட் சாலை பணிகள் - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சவேரியானா மைதானம் பின்புறம் உள்ள வடிகால் தூர்ந்து போய் கிடந்தது.
- போக்குவரத்திற்கு இடையூராக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சவேரியானா மைதானம் பின்புறம் உள்ள வடிகால் தூர்ந்து போய் கிடந்தது.
பல ஆண்டுகளாக வடிகாலின் வழியாக நீர் செல்வதற்கு மணல் திட்டுகளும், அமலைச் செடிகளும் தடையாக இருந்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது அங்கே புதிய வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும் இடத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல் கருத்த பாலம் முதல் வட பத்திரகாளியம்மன் கோவில் வரை நடைபெற்று வரும் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளையும் மற்றும் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தார். இதே போல மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால்,குடிநீர் குழாய் பணிகள் மற்றும் பணிகள் நிறைவடைந்த பண்டு கரை சாலையினை பார்வையிட்டார். அங்கு போக்குவரத்திற்கு இடையூராக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.
மேலும் அந்த சாலையில் தேவையான இடங்களில் அகலப்படுத்தவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ்,பிரபாகரன்,ஜாஸ்பர், மாநகர கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள். உடன் இருந்தனர்.