என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பாளையஞ்செட்டிகுளம் பஞ்சாயத்தில் ரூ.13.50 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு பாளையஞ்செட்டிகுளம் பஞ்சாயத்தில் ரூ.13.50 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/16/1916281-5vijil.webp)
திறப்பு விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் பேசிய காட்சி. அருகில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
பாளையஞ்செட்டிகுளம் பஞ்சாயத்தில் ரூ.13.50 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாநில மகளிா் தொண்டரணி துணைச்செயலாளா் விஜிலா சத்யானந்த் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.
- திறப்பு விழாவில் ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பாளை யூனியன் பாளையஞ்செட்டிகுளத்தில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்ளுா் மேம்பாட்டு நிதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாநில மகளிா் தொண்டரணி துணைச்செயலாளா் விஜிலா சத்யானந்த் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணைச்செயலாளா் ஆவின் ஆறுமுகம், விவசாய தொழிலாளா் அணி துணை செயலாளா் கணேஷ் குமாா் ஆதித்தன், ஒன்றிய செயலாளா்கள் வேலன்குளம் முருகன், போா்வெல் கணேசன், இ.பி நடராஜன், வட்டார காங்கிரஸ் தலைவா் கனகராஜ், பாளையஞ்செட்டி குளம் ஊராட்சி மன்ற தலைவா் ஏமன், துணைத்தலைவா் சஞ்சய் காந்தி, ஒன்றிய அவைத்தலைவா் விஜயகுமாா், மாவட்ட பிரதிநிதி முத்துசாமி மற்றும் நிா்வாகிகள் திருப்பதி, ஜெயசீலன், குறிச்சி ராஜபாண்டி, பெட்டைகுளம் முருகன், மணப்படை வீடு சண்முகவேல், துணை செயலாளா் சம்பத்ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.