என் மலர்
உள்ளூர் செய்திகள்
களக்காட்டில் 2 இடங்களில் புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைப்பு-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- 12 மற்றும் 20-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் வசதி செய்து தருமாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
- மினி மோட்டாருடன் கூடிய புதிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்க மனோகரன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்தார்.
நெல்லை:
களக்காடு நகராட்சி 12 மற்றும் 20-வது வார்டு பொதுமக்கள் அப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி மனோகரன், 12-வது வார்டு ஆவுடைவிலாஸ் தெருவில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டிலும், 20-வது வார்டு மீன்கடை சந்து பகுதியில் ரூ.1.85 லட்சம் மதிப்பிட்டிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மினி மோட்டாருடன் கூடிய புதிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் பணிகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதனை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், துணை தலைவர் பி.சி.ராஜன், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், தி.மு.க. நகர செயலாளர் மணி சூரியன், 20-வது வார்டு உறுப்பினர் சித்ரா, கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.