என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவர்கள் நேரில் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
புதிதாக பரவும் கால்நடை நோய்: உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

- குமாரபாளையம் அருகே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு நோய் பரவி வருகிறது.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு நோய் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார், உமேஷ் பூபாலன் ஆகியோர் நேற்று நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.இதுபற்றி டாக்டர்கள் கூறியதாவது:-
தற்போது வந்துள்ள நோய் ஒருவகை வைரஸ் நோய், அம்மை வகையை சேர்ந்தது. தடுப்பூசியால் நோய் குணமாகி, வட்டமான தடிப்பு மறைந்து விடும். இல்லாவிடில் அது காய்ந்து தானே விழுந்து விடும். கால்நடைகளுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பகுதிகளுக்கும் சென்று நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டு வருகிறோம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகிறோம். கால்நடைகள் வளர்ப்போர் இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.