search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமுத்தாறு பேரூராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும்- கவுன்சிலர்- பொதுமக்கள் மனு
    X

    மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மனு அளிக்க வந்த அப்பகுதி பொதுமக்கள்.

    மணிமுத்தாறு பேரூராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும்- கவுன்சிலர்- பொதுமக்கள் மனு

    • கடந்த 30 ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
    • மேலப்பாளையம் பகுதியில் பாளையங்கால்வாயில் கழிவுகள் நேரடியாக கலக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவ ட்டத்தில் பல்வேறு பகுதி களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

    நம்பிக்கை இல்லா தீர்மானம்

    ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் இளமாறன் கோபால் அளித்த மனுவில், சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்ப த்தினர் குடியிருந்து வருகி ன்றனர். இங்கே கடந்த 30 ஆண்டுகளாக குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. எனவே உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மணிமுத்தாறு பேரூரா ட்சியை சேர்ந்த 15-வது வார்டு கவுன்சிலர் கோட்டிமு த்து தலை மையில் அந்த பகுதி மக்கள் வந்து அளித்த மனுவில், பேரூராட்சியில் நிர்வாக சீர்கேடு அதிகமாக நடக்கி றது. எனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தனர்.

    மேலப்பாளையம்

    மேலப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், மேலப்பா ளையம் பகுதியில் பாளைய ங்கால்வாயில் மலக்கழிவுகள் நேரடியாக கலக்கிறது. மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த நீர் நிலையை நச்சுகேடாக மாற்றி வருகின்றனர். எனவே இந்த நிலையை போக்கி பாளையங்கா ல்வாயில் கழிவுநீர் கலப்ப தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    Next Story
    ×