என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/23/1766252-4.jpg)
ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணத்தை ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழா வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி கொடிய சைத்து தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், தேவி செந்தில் சரவணன் வீர தங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, வட்டார திட்ட உதவியாளர் சித்ரா, மேற்பார்வையாளர் சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் நேரில் சென்று சுத்தம், சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனை களையும் விதம், உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும், கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும் உள்ளிட்டவைளை குறித்து விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.