என் மலர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 107 ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
- ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
- சத்திரப்பட்டி கிராமம் தீண்டாமை இல்லாத ஜாதி, மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டது
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொட–ர்பான ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் உணவு–ப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் விசாகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒட்ட–ன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில், தகுதியுடையவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் 12.12 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் 107 ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கல்வி மேம்பாட்டிற்காக 5 கல்லலூரிகள், ஒரு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை சார்பில் கள்ளிமந்தையத்தில் இந்த ஆண்டு கல்லூரி தொடங்கப்படும். ஒட்டன்சத்திரத்தில் விரைவில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூ.121 கோடி மதிப்பீட்டில் சுமார் 3,200 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நபார்டு திட்டத்தின் கீழ் விருப்பாட்சி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒரு பாலம், மானூர் கிராமத்தில் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் ஒரு பாலம் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் ரூ.5000 மாத தொகுப்பூதியம் அடிப்படையில் 35 நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளிடமிருந்து மொத்தம் 477 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவ–லர்களின் நடவடிக்கையில் உள்ளன. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளில் கோரிக்கைகள் நிறைவே–ற்றப்படும். அரசு அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆர்வமுடன் செயல்பட வேண்டும். மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.