என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![எண்ணெய் பனை சாகுபடி விழிப்புணர்வு பிரசார வாகனம் எண்ணெய் பனை சாகுபடி விழிப்புணர்வு பிரசார வாகனம்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/28/1957660-11.webp)
விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எண்ணெய் பனை சாகுபடி விழிப்புணர்வு பிரசார வாகனம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரசாரம் வானம் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- 2023-24ம் ஆண்டில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுப டியை அதிகரிக்கும் நோக்கில் பிரசாரம் செய்திட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது ;-
தோட்டக்கலை துறை மூலம் 2023-24ம் ஆண்டில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த 2023-24 நிதியாண்டில் 74.50 எக்டர் பரப்பில் எண்ணெய் பனை புதிய பரப்பு விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.21.605 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கோத்ரேஜ் அக்ரோவெட் பிரைவேட் லிட் எனும் தனியா நிறுவனம் மூலம் தரமான கன்றுகள் உத்தரவாத கொள்முதல் முறையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும் எண்ணெய் பனை சாகுபடியில் முதல் 4 ஆண்டுகள் வரை பராமரிப்பு செலவினத்திற்காக ரூ.5,250 மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்ய டீசல்/ மின் பம்பு செட்டுகள், பாதுகாப்பான சரகங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல், நடவு செய்த கன்றுகளை பாதுகாக்க கம்பிவலை, சிறிய உழுவை எந்திரம், பனை இலை வெட்டும் கருவி, அறுவடை செய்ய ஏதுவாக அலுமினிய ஏணி, பழக்குலை வெட்டும் கருவி ஆகியவை அதிகபட்சமாக 50 சதவீத மானியத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது
எண்ணெய் பனை சாகுபடி குறித்தும் அரசின் மானிய திட்டங்களை எடுத்துரைக்கும் வகையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வலகயில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எண்ணெய் பனை சாகுபடி செய்ய ஆர்வமுள்ளவ விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குர் (பொ) ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதி தங்கம், வேளாண்மை இணை இயக்குநர் (மா.தி) சுஜாதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) கனிமொழி, தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொ) வெங்கட்ராமன், தஞ்சாவூர், ஒரத்தநாடு பட்டுக்கோ ட்டை, பேராவூரணி, கும்பகோணம் மற்றும் பாப நாசம் தோட்டக்கலை உதவி இயக்குநர், தலைமை சந்தை விரிவாக்கம், கோத்ரேஜ் அக்ரோவெட் பிரைவேட் லிட் முத்துச்செல்வன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.