என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரத்திவேலூர் அருகே கார் மோதி மூதாட்டி பலி
- மணியனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து ஆதிதிராவிடர் தெரு காங்கிரீட் ரோட்டில் செல்வதற்காக காரை எடுத்தபோது, அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னம்மாள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 75). இவர் 100 நாள் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் மணியனூர் அங்காளம்மன் கோவில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, சேலம் அஸ்தம்பட்டி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், சின்னம்மாள் நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல் மணியனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து ஆதிதிராவிடர் தெரு காங்கிரீட் ரோட்டில் செல்வதற்காக காரை எடுத்தபோது, அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே பிரேம்குமார் உடனே காரை நிறுத்தினார். கார் மோதியதில் சின்னம்மாள் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னம்மாள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விபத்து ஏற்படுத்திய பிரேம்குமாரை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.