search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் புதிய வழித்தடங்களில் 3 அரசு டவுன் பஸ்கள் இயக்கம்
    X

    புதிய வழித்தடங்களில் பஸ்களை ராஜேந்திரன் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் லட்சுமணன், நிர்வாக இயக்குநர் பொன்முடி மற்றும் பலர் உள்ளனர்.

    சேலத்தில் புதிய வழித்தடங்களில் 3 அரசு டவுன் பஸ்கள் இயக்கம்

    • தமிழ்நாடு அரசு சேலம் போக்குவரத்து கழக கோட்டத்திற்கு புதிய வழிதடத்தில் 3 டவுன் இயக்க அனுமதி வழங்கியது.
    • சிறப்பு விருந்தினராக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ராேஜந்தி ரன் எம்.எல்.ஏ. பங்கேற்று கொடி அசைத்து புதிய வழித்தடத்தில் 2 பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    நகருக்குள் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கிராமங்களில் இருந்து நகருக்கு வந்து செல்வது முழுவதும் தவிர்க்கப்பட்டு பயண நேரத்தை பெருமளவு குறைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு சேலம் போக்குவரத்து கழக கோட்டத்திற்கு புதிய வழிதடத்தில் 3 டவுன் இயக்க அனுமதி வழங்கியது.

    எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    இந்த பஸ்கள் இயக்க தொடக்க நிகழ்ச்சி போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குநர் பொன்முடி, மண்டல மேலாளர் லட்சு மணன் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தினராக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ராேஜந்தி ரன் எம்.எல்.ஏ. பங்கேற்று கொடி அசைத்து புதிய வழித்தடத்தில் 2 பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதைத்தவிர ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ஒரு பஸ்சின் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டது. புதிய வழிதடத்தில் இந்த பஸ் இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

    இதில் ஒரு பஸ் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 ரோடு, ஏ.வி.ஆர். ரவுண்டானா, திருவாக்கவுண்டனூர் பைபாஸ்,கந்தம்பட்டி பைபாஸ், கொண்ட லாம்பட்டி பைபாஸ், சீலநாய்கன்பட்டி பைபாஸ், உடையாப்பட்டி வழியாக அயோத்தியாப்பட்டணம் பகுதி வரை இயக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அதே வழியாக சேலத்திற்கு வருகிறது. ஒரு நாளைக்கு மொத்தம் 28 நடைகள் இந்த பஸ் இயக்கப்படுகிறது.

    மற்றொரு பஸ், பழைய பஸ் நிலையத்தில் இருந்து மணக்காடு வழியாக கன்னங்குறிச்சி பகுதிக்கு இயக்கப்படுகிறது. அதுபோல் அங்கிருந்து மறுமார்க்கமாக பழைய பஸ் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது.

    வழிதட மாற்றம்

    வழிதடம் மாற்றம் செய்யப்பட்ட பஸ் ஏற்கனவே பஸ் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்தது.

    இனிமேல் இந்த பஸ் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னங்குறிச்சி, பாலபாரதி பள்ளி, மணக்காடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு, வழியாக பெரியகொல்லப்பட்டி பகுதிக்கு இயக்கப்படுகிறது. பின்னர் மறுமார்க்கமாக அதே வழியாக சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. காலை 8.15 மணி முதல் மாலை 4.50 மணி வரை இயக்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் ெதா.மு.ச. மணி உள்பட போக்குவரத்து கழக ஊழியர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×