என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆயுதபூைஜ, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை
- வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
- பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டு கின்றனர். இதை சாதகமாக்கி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வழக்கமாக உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வசித்தும் வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பின்னர் விடுமுறை முடிந்த பிறகு மீண்டும் சேலம் திரும்புகின்றனர்.
இதையொட்டி தமிழக அரசு சார்பில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதேபோல் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது.
இதற்காக முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டு கின்றனர். இதை சாதகமாக்கி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வழக்கமாக உள்ளது.
ெதாடர்விடுமுறை
இந்த நிலையில் நடப்பாண்டு வருகிற 2-ந்தேதி காந்தி ெஜயந்தி, 4-ந்தேதி ஆயுதபூைஜ, 5-ம் தேதி விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதே போல் 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நடப்பாண்டும் வழக்கம்போல் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணம் உயர்வு
உதாரணமாக சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான ஆம்னி ஏ.சி. பஸ்களின் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்டசம் ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.3000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏ.சி. அல்லாத பஸ்களில் ரூ.1000 முதல் ரூ.1800 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர் ேகாவில், மார்த்தாண்டம் திருவனந்தபுரம், எர்ணா குளம், கொல்லம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கோரிக்கை
இந்த கட்டணம் உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ள பயணிகள், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்