என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஏற்காடு - குப்பனூர் மலைப்பாதையில்விபத்து நடந்த இடங்களில் கலெக்டர், எஸ்.பி. ஆய்வு
- ஏற்காட்டில் அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு நேற்று மாலை குப்பனூர் வழியாக சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
- வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் பகுதியில் வந்தபோது, ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்தி டியூஷன் எடுத்து வருகிறார்.
சுற்றுலா
இந்த நிலையில் நேற்று காலை தன்னிடம் டியூஷன் படிக்கும் 20 மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் உட்பட 30 பேருடன் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றார். அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு நேற்று மாலை குப்ப னூர் வழியாக சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
மரத்தில் மோதி...
வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் பகுதியில் வந்தபோது, ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பயத்தில் கூச்சலிட்டனர்.
இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்க ளும், அருகில் இருந்தவர்க ளும் ஏற்காடு போலீசா ருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வேனுக்குள் சிக்கிய மாணவ, மாணவி களை மீட்க தொடங்கினார்.
படுகாயம்
சிராய்ப்பு காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவ, மாணவிகளை 108 ஆம்பு லன்ஸ் மூலம் வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த னர். படுகாயம் அடைந்த 3 பேர் சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடரும் விபத்துகள்
மே தினமான கடந்த 1-ந் தேதி, வேலூரில் இருந்து 12 வாலிபர்கள் ஒரு வேனில் ஏற்காட்டிற்கு வந்தனர். அவர்கள் இயற்கையை ரசித்து விட்டு ஊர் திரும்பும்போது கொட்டச்சேடு அருகே வேன் விபத்தில் சிக்கி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் 11 பேர் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் ஏற்காடு வெள்ளக்கடை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு மைக்செட் போடுவதற்காக ஈரோடு மாவட்டம் பள்ளிப்பா ளையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு 6 பேர் லாரியில் வந்தனர்.
அவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அதிகாலை குப்பனூர் வழியாக ஊர் திரும்பிய போது, ஆத்துப்பாலம் பகுதியில் லாரி மரத்தில் மோதிய விபத்தில், ஓமலூர் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 3 நாட்களில் நடந்துள்ள, இந்தத் தொடர் விபத்துக்களால் பொதுமக்க ளும், சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குண்டும் குழியுமாக..
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சேலம் அடிவாரம் வழியாக ஏற்காடு செல்லும் பாதை யில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்புச் சுவர் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக வாகனங்கள் ஏற்காட்டிற்கு சென்று வருகிறது.
தற்போது விடுமுறை சீசன் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குப்பனூர் பாதை குண்டும் குழியுமாக இருக்கிறது. மேலும் அவ்வப்போது ஏற்காட்டில் மழை பெய்வ தால், ஈரப்பதத்தில் வாக னத்தில் உள்ள பிரேக்கு களும் சரியாக பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்துக்கள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆகியோர் விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.