என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/01/13/1821134-bike-aacident.webp)
அறிவழகன்
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாகனத்தை அறிவழகன் ஓட்டி சென்றார்.
- அறிவழகனுக்கு தலையில் பலத்த காயமும்,சுதாகருக்கு இடது கையிலும், பாரிவேந்தருக்கு வலது கால் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.
க்டலூர்:
வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாரிவேந்தர் ( வயது29) பன்னீர்செல்வம் மகன் அறிவழகன் ( 26) தர்மலிங்கம் மகன் சுதாகர்( 30) ஆகிய 3 பேரும் பாரிவேந்தருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக கச்சிமைலூர் சென்றுவிட்டு மீண்டும் அரியநாச்சி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை அறிவழகன் ஓட்டி சென்றார். பாசார் கிராமம் கொளஞ்சியப்பன் வயல் அருகே வந்தபோது வளைவில் வாகனம் திரும்பும் போது எதிர்பாராத விதமாக இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அறிவழகனுக்கு தலையில் பலத்த காயமும்,சுதாகருக்கு இடது கையிலும், பாரிவேந்தருக்கு வலது கால் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. காயம்பட்ட 3 பேரையும் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அறிவழகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். மற்ற 2 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிந்து இறந்த அறிவழகன் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.