search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இரும்புதலையில், நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
    X

    நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

    இரும்புதலையில், நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

    • அறுவடை செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
    • கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருந்தனர்.

    மெலட்டூர், ஜன.19-

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், இரும்புதலை பகுதியில் சம்பா பருவத்தில் பல நூறு ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்கு விளைந்து தற்போது அறுவடை செய்யும் பணி கடந்த சிலநாட்களாக நடைபெற்று வந்தது.

    அரசுகொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் இரும்புதலை பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து கடந்த சிலநாட்களாக விவசாயிகள் காத்திருந்தனர்.

    கொள்முதல் நிலைய த்தை உடனடியாக திறக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி மூலமாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் இரும்புதலை பகுதியில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க உத்திரவிட்டனர் இதனையடுத்து நேற்று புதன்கிழமை இரும்புதலை அரசு கொள்முதல் நிலையம் ஊராட்சிமன்ற தலைவர் பாலாஜி முன்னிலையில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல்நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழக அதிகாரிகளுக்கும், மற்றும் முயற்சிகள் மேற்கொண்ட ஊராட்சி மன்ற தலைவருக்கும் விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×