என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருந்தகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
மருந்தகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
மருந்தகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
சங்கரன்கோவில் அருகே கால்நடை மருந்தகம் திறப்பு

- பெரும்பத்தூர் கால்நடை மருந்தக கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது.
- விழாவில் சதன்திருமலைகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், மணலூர் ஊராட்சியில், மணலூர் கிராமத்தில், பெரும்பத்தூர் கால்நடை மருந்தக கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சதன்திருமலைகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் லாலா சங்கரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வி, மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி, பெரும்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவசேனா நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கால்நடை பராமரிப்பு துறை நெல்லை மண்டல இணை இயக்குநர் டாக்டர். பொன்வேல், கோட்ட உதவி இயக்குநர் டாக்டர். கலையரசி, சங்கரன்கோவில் உதவி இயக்குநர் டாக்டர் ரஹமத்துல்லா மற்றும் மருத்துவர்கள் மகிழன், சுருளிராஜ், வசந்தா, ராஜா, சசிதரன், கால்நடை ஆய்வாளர் கோபால், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முத்துமாரியப்பன், அனிதா ஆகியோர் விழா ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.