என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள வெளி மாநில சாராயம் பறிமுதல்
- பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வாகனத்தை சோதனை செய்து போது அதில் வெளிமாநில பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்ததனர்.
நன்னிலம்:
பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பேரளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருக்கொட்டாரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்ய முயன்றனர்.
அப்பபோது காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
சந்தேக அடிப்படையில் வாகனத்தை சோதனை செய்து போது அதில் வெளிமாநில பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை அடுத்து காரில் இருந்த ரூ 75 ஆயிரம் மதிப்புள்ள 2500 பாக்கெட் சாராயத்தையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை வலை வீசி தேடி வருகின்றனர்.