என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பழனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓராண்டில் 1.11 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சாதனை பழனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓராண்டில் 1.11 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சாதனை](https://media.maalaimalar.com/h-upload/2023/07/07/1911038-palani-1.webp)
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சி.
பழனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓராண்டில் 1.11 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சாதனை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பழனி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவமும் பார்க்கப்படுகிறது.
பழனி:
பழனி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இங்கு காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவமும் பார்க்கப்படுகிறது.
தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக சுத்தமான பரா மரிப்பு, நவீன சிகிச்சைகள், மகப்பேறு சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணங்களால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது. கடந்த 2022-ல் 1 லட்சத்து 11 ஆயிரத்து 800 வெளி நோயாளிகளும், 1,087 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் வரை 6 மாதங்களில் 55,658 வெளிநோயாளிகளும், 719 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று சென்று ள்ளனர். இதில் கடந்த 2022-ல் 27 குழந்தைகள் பிறந்துள்ளன. 2023-ல் ஜூன் மாதம் வரை 28 குழந்தைகள் பிறந்துள்ளன. ஜூன் மாதம் மட்டும் 8 குழந்தைகள் பிறந்துள்ளன என நகர் நல அலுவலர் மனோஜ் குமார் தெரி வித்தார்.