search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடி புள்ளிமான் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
    X

    விழாவில் கலை நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    பணகுடி புள்ளிமான் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

    • சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கலந்துகொண்ட அனைவருக்கும் விதைப்பந்து வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன் மற்றும் வழக்கறிஞரும், புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வேணுகோபால் தலைமை தாங்கினர்.பணகுடி நகராட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் ஓய்வு பெற்ற துணை அஞ்சல் நிலைய அதிகாரி செல்வராஜ், ஓய்வு பெற்ற காவல்துறை சார் ஆய்வாளர்களான தங்கப்பா மற்றும் எழில் , ஒன்லேர்ன் நிறுவன பிரதிநிதி கிளமெண்ட் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் தேவிகா பேபி வரவேற்று பேசினார். விழாவில் லட்சுமிதேவி கல்வி குழும தலைவரான அனுகிராகஹா, நிர்வாகிகள் டாக்டர் பொன்னு லட்சுமி மற்றும் ஆனந்த கண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ- மாணவிகள் தங்களது தனி திறமையை வெளிக்காட்டும் விதமாக கராத்தே, யோகா, சிலம்பம் மற்றும் ஸ்கேட்டிங் போன்றவற்றை செய்து அனைவரையும் கவர்ந்தனர். மாணவ- மாணவிகளின் நடனம் மற்றும் நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் விதைப்பந்து வழங்கப்பட்டது. பள்ளியின் கல்வி நிர்வாகி டாக்டர் சுந்தர் ராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×