என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![முதல்-அமைச்சரை சந்தித்து தி.மு.க.வில் இணைந்த ஊராட்சி தலைவர் முதல்-அமைச்சரை சந்தித்து தி.மு.க.வில் இணைந்த ஊராட்சி தலைவர்](https://media.maalaimalar.com/h-upload/2022/12/10/1804728-panchayatpresidentjoindmk.webp)
X
தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் ராமராஜ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் இணைந்தார். அருகில் சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ உள்ளார்.
முதல்-அமைச்சரை சந்தித்து தி.மு.க.வில் இணைந்த ஊராட்சி தலைவர்
By
மாலை மலர்10 Dec 2022 2:25 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமையில் 250 - க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
- நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் நேற்று முன்தினம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி ஆகியோர் தலைமையில் 250 - க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்முத்தையா பாண்டியன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் மனோகரன், தேவிபட்டணம் கிளைசெயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
X