என் மலர்
உள்ளூர் செய்திகள்
பங்குனி உத்திர திருவிழா நிறைவு: பழனியில் சாமி தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்
- பக்தர்கள் விரதம் தொடங்கி தீர்த்தம் எடுத்து வந்து முருகபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
- கிரிவீதி, அடிவாரம், மின்இ ழுவை ரெயில்நிலையம், ரோப்கார்நிலையம், பஸ்நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
பழனி:
தமிழ்கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு வெளிமாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூச விழாவிற்கு அடுத்தபடியாக பங்குனி உத்திரம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக கொடுமுடி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் விரதம் தொடங்கி தீர்த்தம் எடுத்து வந்து முருகபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மார்ச்.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடைபெற்ற விழாவில் வெள்ளிகாமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்கக்குதிரை, வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் முத்து க்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி த்தார்.
3ம் தேதி திருக்கல்யாணமும், 4ம் தேதி பங்குனி உத்திர தோரோட்டமும் நடைபெற்றது. 6ம் தேதி முத்துக்குமாரசாமி வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்காக பக்தர்கள் பாதயாத்திரை யாக வந்து முருகனை தரிசனம் செய்தனர். நேற்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு ஊர்கோவிலுக்கு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி திரும்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் இரவு திரு ஆவினன்குடி கோவிலில் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது. விழாவையொட்டி பழனி அடிவாரம், கிரிவீதி, குடமுழுக்கு நினை வரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று காலைமுதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கிரிவீதி, அடிவாரம், மின்இ ழுவை ரெயில்நிலையம், ரோப்கார்நிலையம், பஸ்நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. மலை க்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.