என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/08/1894908-10.webp)
பாபநாசம் தாசில்தார் பூங்கொடி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- குடிநீர் திட்டம் அமைப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- பணிகளை தொடர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.
பாபநாசம்:
வீரமாங்குடி, சருக்கை, வாழ்க்கை, சத்தியமங்கலம் அருகே நீர் சேகரிப்பு கிணறு அமைத்தல், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பேரூராட்சிகள் மற்றும் 980 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தாசில்தார் பூங்கொடி தலைமை தாங்கினார்.
இதில் குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் நடராஜன், ராணி மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஜெகதீசன், செல்வராஜ், தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், தூத்தூர் விவசாய சங்க தலைவர் தங்க. தர்மராஜன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வாழ்க்கை- தூத்துக்குடி கிராமங்களுக்கு இடையே தடுப்பணைகள் அமைத்து தரும் பட்சத்தில் மேற்படி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை தொடர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.