search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் ரெயில்நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் பயணிகள் கடும் அவதி
    X

    கடந்த 3 நாட்களாக சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர்.

    திண்டுக்கல் ரெயில்நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் பயணிகள் கடும் அவதி

    • திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • 2,3வது பிளாட்பாரங்களுக்கு செல்ல சுரங்கப்பாதை உள்ளது. இங்கு மழை காலங்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பயணிகள் சிரமமடைந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் வழியாக தினசரி 60க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வருகின்றனர்.

    ஆனால் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். நுழைவு பகுதியிலிருந்து 2,3வது பிளாட்பாரங்களுக்கு செல்ல சுரங்கப்பாதை உள்ளது. இங்கு மழை காலங்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பயணிகள் சிரமமடைந்தனர்.

    குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் ரெயில்களை பிடிக்கும் அவசரத்தில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் இறங்கி மற்ற பிளாட்பாரங்களுக்கு செல்கின்றனர். இங்குள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றுகின்றனர். சுரங்கப்பாதையையொட்டி பெரிய கிணறு உள்ளது.

    மழை காலங்களில் கிணறு நிரம்பி தண்ணீர் செல்ல வழியின்றி ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்கதையாகி வருகிறது. தற்போது 3 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. இதற்கு ரெயில்வே அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் பயணிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை நிரந்தரமாக எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    Next Story
    ×