என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோடை காலத்தில் பல்வேறு நோய்களை குணமாக்கும் வாழை இலை குளியலுக்கு மாறிய மக்கள்
- உடல் முழுவதும் மூலிகை எண்ணெயை தடவியவாறு வாழை இலையால் மூடி சுமார் 45 நிமிடம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- இதனால் கோடையில் ஏற்படும் சரும நோய், உடல் உஷ்ணம், செரிமாண க்கோளாறு போன்றவற்றை தீர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெப்பத்தை தணிக்க பல்வேறு உணவுகளை உட்கொள்ளும் வேளையில் உடல் உஷ்ணம், உடல் பருமன், செரிமாண க்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டும் அவதிப்படுகின்றனர்.
இதனை தவிர்க்க திண்டுக்கல்லில் தனியார் அமைப்பின் சார்பில் வாழை இலை குளியல் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உடல் முழுவதும் மூலிகை எண்ணெயை தடவியவாறு வாழை இலையால் மூடி சுமார் 45 நிமிடம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் கோடையில் ஏற்படும் சரும நோய், உடல் உஷ்ணம், செரிமாண க்கோளாறு போன்றவற்றை தீர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி மன அமைதி மற்றும் உடல் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். வாழை இலை குளியல் மட்டுமின்றி நீராவி குளியல், யோகா பயிற்சிகளும் அளிக்கப்படு கிறது. இதன் மூலம் நீண்ட நாள் நோய்வாய் பட்டவர்கள் கூட குணமடைய முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
மூலிகை எண்ணெய் மற்றும் இயற்கை உணவுகள் இம்மையத்தின் சார்பில் தயாரிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைப்படு பவர்கள் இங்கேயே தங்கி இருந்தும் இந்த மருத்துவ முறையை எடுத்துக்கொள்கின்றனர். விஞ்ஞானம் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும் நோய் வாய் பட்டால் இன்றைய உலகில் மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையை தேடிச் செல்லும் நிலையே உள்ளது.
ஆனால் பல லட்சங்களை செலவு செய்தாலும் நம் முன்னோர்கள் பின்பற்றிய இது போன்ற இயற்கை உணவு மற்றும் பாரம்பரிய முறையை பின் பற்றினாலே பக்க விளைவுகளற்ற நோய் குணமாகும் என்று தெரிவிக்கின்றனர்.