என் மலர்
உள்ளூர் செய்திகள்
பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
- மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ம், தரங்கம்பாடி தாலுகாவில் பெரிய மடப்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூர், பொறையார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் செம்பனார்கோவில், ஆக்கூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால், இக்கிராம த்துக்கு மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி காவேரி டெல்டா பாசனதாரர் விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் குரு கோபிகணேசன் தலை மையில் பெரியமடப்புரம், மாத்தூர், முக்கரும்பூர் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.