என் மலர்
உள்ளூர் செய்திகள்

தோரணமலையில் சீருடை பணியாளர் தேர்வு பயிற்சிக்கான விளையாட்டு மைதானம் திறப்பு
- தோரணமலை முருகன் கோவிலானது அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட கோவிலாகும் ஆகும்.
- விழாவில் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.
கடையம்:
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமையும், பழமையும் உடைய கோவிலாகும்.
தோரணமலை முருகன் கோவில்
தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறை, ரெயில்வே காவல்துறை போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கான உடல் திறன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக சுற்று வட்டார கிராமப்புறம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடல் திறனை மேம்படுத்தும் மைதானங்கள், நீளம் தாண்டுதலுக்கான மைதானம் மற்றும் கயிறு ஏறும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ள மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் எலும்பு- மூட்டு சிறப்பு மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.
நீளம் தாண்டுதல்
விழாவில் திரளான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்பட பயிற்சிகளை திறம்பட செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் பிரசாதம், காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் மைதானம் அமைத்துக் கொடுத்த கோவில் நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.