என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருக்குறுங்குடி அருகே பிளஸ்-2 மாணவி மாயம் திருக்குறுங்குடி அருகே பிளஸ்-2 மாணவி மாயம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/26/1797963-missing-1.webp)
திருக்குறுங்குடி அருகே பிளஸ்-2 மாணவி மாயம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- 21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தந்தை வெளியூரில் உள்ள கடையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தாயார் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். கடந்த
21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே வீட்டிற்கு வாட்ஸ்-ஆப் காலில் பேசிய மாணவி தான் திருப்பூரில் இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார். இதுபற்றி மாணவியின் தாயார் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.