என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி: இரட்டைக் கொலையில் தந்தை- மகனுக்கு வலைவீச்சு

- ராம்குமாரை முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
- மாரியம்மாளுக்கும், அவரது அண்ணன் முருகேசனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மாயா என்ற ராம்குமார் (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் (42).
இவரது அண்ணன் முருகேசன் (49) என்பவர் அதே தெருவில் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
கணவன்-மனைவி கொலை
நேற்று இரவு ராம்குமார் தனது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து ராம்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
பின்னர் முருகேசன் உள்ளிட்ட 2 பேரும், ராம்குமார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த ராம்குமாரின் மனைவியும், தனது சகோதரியுமான மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டி கொன்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தந்தை-மகனுக்கு வலைவீச்சு
அதில் மாரியம்மாளுக்கும், அவரது அண்ணன் முருகேசனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அந்த சொத்து மாரியம்மாள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், அவரது மகன் மகேஷ் (20) ஆகியோர் ராம்குமார் மற்றும் மாரியம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர வின்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
தலைமறைவான தந்தை-மகன் எங்கு உள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.