search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றத்திற்காக காத்திருக்கும் தமிழகம் திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
    X

    திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

    மாற்றத்திற்காக காத்திருக்கும் தமிழகம் திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

    • நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்த பின்னரும் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்த பின்னரும் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது படங்கள் வெளியாகும் சமயங்களிலும், அவரது பிறந்தநாளிலும் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம்.

    தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிஉள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கண்இமைக்கும் நொடியில் ஒரு மாற்றம் இருக்கு, தமிழகமே இன்றும் காத்திருக்கு தலைவா என்ற வாசகங்களுடன் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×