என் மலர்
உள்ளூர் செய்திகள்
மேம்பால சுவர் இடிந்து விழுந்து பலியான முதியவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்ககோரி அ.தி.மு.க. சார்பில் போஸ்டர்கள்
- தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டு ள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் ரூ. 2.83 கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த 3-ந் தேதி நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த முதியவர் வேல்முருகன் என்பவர் பால் பாக்கெட் வாங்கு வதற்காக சென்ற போது ஈரடுக்கு மேம்பா லத்தின் சுவர் விழுந்து படுகாய மடைந்தார்.
தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 18-ந் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த 19-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் ஓரு மனு கொடுத்தனர். அதில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டு ள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே அ.தி.மு.க. 15-வது வட்டச் செயலாளர் பாறையடி மணி பெயரில் மாநகர பகுதியில் பல இடங்களில் போஸ் டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் மேம்பால சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்தி னருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இதற்கு காரண மானவர் அதிகாரிகள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும், இல்லை யென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.