search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  மின் சிக்கன வார விழா
    X

    சங்கரன்கோவிலில் மின் சிக்கன வார விழா

    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சங்கரன்கோவில் வட்டத்தின் சார்பில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழா நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் கருப்பசாமி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சங்கரன்கோவில் வட்டத்தின் சார்பில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் கருப்பசாமி வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மின்சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்புகள் குறித்து உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜ், முஜீப்ரகுமான், உதவி கணக்கு அலுவலர் குமுதம் ஆகியோர் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

    தொடர்ந்து மின் சிக்கனம் குறித்து நடைபெற்ற கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் இளநிலை பொறியாளர் சங்கரசுப்பிரமணியன், மின்வாரியத்தை சேர்ந்த ராஜலிங்கம், வேலாயுதம், கீதா, பாமிஞானசுவிங்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×