search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
    X

    மகா நந்திக்கு மஞ்சள், பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு

    • தஞ்சை பெரிய கோவிலில் மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
    • மகாநந்திக்கு மஞ்சள், பால் மற்றும் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்து.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.

    தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள பெரிய கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    இங்குள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் மற்றும் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேப்போல் பிள்ளையார்பட்டியில் உள்ள ஹரித்ரா விநாயகர் கோவிலில் விநாயகருக்கு நந்தி வாகனம் உள்ளது.

    இக்கோவில் அர்த்த மண்டபத்தில் ஆவுடையார் இல்லாமல் லிங்கம் உள்ளது.

    கோவில் பிரகாரத்தில் கட்டப்பட்டுள்ள வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் நந்திக்கு நேற்று ஆவணி சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    கருவறையின் முன்னதாக உள்ள அர்த்த மண்டபத்தில் உள்ள லிங்கத்திற்கும் விநாயகர் வாகனமாக உள்ள நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    Next Story
    ×