என் மலர்
உள்ளூர் செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் மழையை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை- ஆ.ராசா எம்.பி. பேட்டி
- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டத்தில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட குயின்ஹில்ஸ் பகுதி தடுப்புச்சுவர், மவுண்ட்பிளசன்டில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை சுற்று லாத்துறை அமைச்சர்
கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு, முத்தாலம்மன் பேட்டை அங்கன்வாடி மையத்தில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.
பின்னர், நீலகிரி எம்.பி. ஆ,ராசா நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தயாவசிய தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம் 24 மணிநேரமும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்சினி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.