search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு முன் கவனிப்பு வார்டு புதிதாக திறப்பு
    X

    புதிதாக திறக்கப்பட்ட வார்டை படத்தில் காணலாம்.

    தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு முன் கவனிப்பு வார்டு புதிதாக திறப்பு

    • தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் 10 முதல் 15 பிரசவங்கள் நடக்கிறது.
    • புதிய வார்டை இணை இயக்குனர் பிரேமலதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் 10 முதல் 15 பிரசவங்கள் நடக்கிறது. இங்கு தினந்தோறும் பிரசவத்திற்காக தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் வருவதால், பிரசவ முன் கவனிப்பு படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இருந்து வந்தது.

    தற்போது அதனை சீர் செய்ய மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அறிவுரைப்படி, தென்காசி மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் ஏற்பாட்டில் 20 படுக்கைகள் கொண்ட வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை இணை இயக்குனர் பிரேமலதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மகப்பேறு துறை தலைவர் டாக்டர் புனிதவதி, டாக்டர்கள் தமிழருவி, சைனி கிருத்திகா, விஜயகுமார், செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, ஜெகதா மற்றும் மகப்பேறு பிரிவில் பணிபுரியும் செவிலியர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் பேசுகையில், உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் இங்கு வார்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணி காக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். உறைவிட மருத்துவர் ராஜேஷ் வார்டு பணியை செய்து கொடுத்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள், கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

    Next Story
    ×