என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி
- களஞ்சியம் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள்.
- நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்க–பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்களை வழங்கினர்.
வேதாரண்யம்:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் இடத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளைந்த நெல்லை அறுத்து தைப்பூசம் அன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அளிக்கும் நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் இதே போல் நெல் அறுவடை செய்து அதனை கோட்டையாக கட்டி விவ சாயிகள் வேதா ரண்யம் கொண்டு வந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று வேதாரண்யம் கோவிலில் ஒப்படைத்தனர்.
பின்பு அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாரா தனை காண்பிக்கபட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்களை வழங்கினர்.
Next Story