search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி  தேசிய கொடியுடன் ஊர்வலம்
    X

    ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.


    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய கொடியுடன் ஊர்வலம்

    • கோவில்பட்டி புதுக்கிரா மத்தில் உள்ள இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக நடைபெற்றது.
    • இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் மதநல்லிணக்க ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிரா மத்தில் உள்ள இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறு வது வழக்கம்.

    குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் மதநல்லிணக்க ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் மட்டும் எளிமையாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக நடைபெற்றது.

    மதநல்லிணக்க ஊர்வலம்

    இதையொட்டி காலையில் சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் கோவில் பட்டி ரெயில் நிலையம் முன்பு மதநல்லிணக்க ஊர்வலம் தொடங்கியது. இளைஞர்களின் சிலம்பம், மேளம், தவில், செண்டை மேளம், டிரம்ஸ் என அனைத்து வகையான இசை வாத்தியங்கள் முழங்க இளைஞர்களின் துள்ளல் ஆட்டத்துடன் ஊர்வலம் தொடங்கியது.

    முதலில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் முளைப்பாரியை பெண்கள் எடுத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து உலக மக்கள் ஒற்றுமை, நன்மை மற்றும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் எடுத்து வந்த பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    வேடமணிந்து வந்த குழந்தைகள்

    ஊர்வலத்திற்கு இடையே தேசியக்கொடி உடன் பாரத மாதா, கிருஷ்ணர், சரஸ்வதி, விநாயகர், முருகன், சுடலைமாடன் சுவாமி, ராணுவ வீரர் என பல்வேறு வேடங்களில் குழந்தைகள் காட்சி அளித்தபடி கலந்து கொண்டனர். ரெயில் நிலையம் முன்பு தொடங்கிய ஊர்வலம் முகம்மதுசாலியபுரம் வழியாக கோவிலை வந்தடைந்தது. இதில் 5000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஊர்வலம் நடைபெறமால் இருந்த விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் இன்று விமர்சையாக நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், 2கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற மக்களின் ஊர்வலம் ஒற்றுமையை பறை சாற்றியது மட்டுமின்றி கோவில்பட்டி நகரின் பெருமையை உயர்த்தி உள்ளதாக அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் முத்துராஜன் சண்முகவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சமூக சங்கத் தலைவர் சங்கரன் செல்வ லட்சுமி ஸ்வீட் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    இதை போன்று அன்னை தெரசா நகர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×