என் மலர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் பகுதியில் வெல்லம் விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
- கரும்பு முதிர்ச்சி அடைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
- 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை கரும்பை விற்பனை செய்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், சேளூர், செல்லப்பம்பாளை யம், கபிலக்குறிச்சி, கபி லர்மலை, பிலிக்கல்பாளை யம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபா ளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், சிறு நெல்லி கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளி பாளையம், திடுமல், அரசம்பாளையம், கொத்தமங்கலம், ஜமீன் இளம்பள்ளி, குறும்பல மகாதேவி, மாரப்பம்பா ளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
கரும்பு முதிர்ச்சி அடைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை கரும்பை விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை என தயாரிக்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்லங்களை நன்றாக உலர்த்தி 30 கிலோ எடை கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றனர்.
தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிய வியாபாரிகள் தமிழகத்திலுள்ள கரூர், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1180-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிற்பம் ரூ.1,220-க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1250க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1175 விற்பனையானது. உற்பத்தி குறைவின் காரணமாக வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது. இதனால் வெல்லம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.