என் மலர்
உள்ளூர் செய்திகள்
150 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- முகாமில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
- ரூ. 1 கோடி 12 லட்சத்து 23 ஆயிரத்து 425 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா, வெங்கட் சமுத்திரம் அடுத்த கண்டமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் வருவாய் துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சுகாதார துறை, தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, ஊரக வளர்ச்சி துறை (மகளிர் திட்டம்) சார்பில் 150 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி 12 லட்சத்து 23 ஆயிரத்து 425 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், திருவையாறு ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் சரிதா, ஊராட்சி தலைவர் அமுதா மற்றும் தஞ்சை மாவட்ட அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சை ஆர்.டி.ஓ. இலக்கியா அனைவ ரையும் வரவேற்றார். முடிவில் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா நன்றி கூறினார்.